CSR

றஹீமிய்யா விளையாட்டுக்கழகம் தனது பதிமூன்றாவது வருட நிறைவினை முன்னிட்டு "Smartcity Departmental Stores" நிறுவன பிரதான அனுசரணையில் பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நடாத்திய மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.

அணிக்கு 8பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 68 விளையாட்டு கழகங்கள் பங்கு கொண்ட இரவு நேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 05.09.2019ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்று அதன் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நேற்று (10) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் எவர்டொப் விளையாட்டு கழகமும், சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டனர்.

 

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும், 30,000 ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற எவர்டொப் விளையாட்டு கழகத்திற்கு கிண்ணமும், 20,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.

றஹீமிய்யா விளையாட்டு கழகத்தின் செயலாளர் ஜனாப். முஹம்மட் முஸாதீக் தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக Smartcity Departmental Stores நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எந்திரி. ஜிப்ரி அவர்களும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும், சுற்றுப் போட்டிக்கு இணை அனுசரணை வழங்கிய நிறுவனங்களின் முகாமையாளர்கள், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள், றஹீமிய்யா விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்ட இவ் நிகழ்வு நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.